கோவையில் 45 வயது பெண் மருத்துவர் காய்ச்சல் சளி காரணமாக தனி வார்டில் சிகிச்சைகக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூரில் உள்ள ரயில்வே மருத்துவமனைக்கு கடந்த 23ம் தேதி 45 வயது மதிக்கத்தக்க பெண் மருத்துவர் பணியில் அமர்த்தப்பட்டார். இவருக்கு நேற்றைய தினம் கடும் காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு ஏற்பட்டு உள்ளது. இதனை கண்ட சிலர் அவரை உடனடியாக இ எஸ் ஐ மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதித்தனர்.
அங்கு இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் அவரது ரத்தம் மற்றும் சளி மாதிரிகளை சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இவரிடம் சிகிச்சை மேற்கொண்டவர்கள் யார் என்பது குறித்த பட்டியலை குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அது கிடைத்ததும் அவர்களுக்கும் உடலளவில் பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மருத்துவர் தங்கியிருந்த வீடு மருத்துவமனை ஆகிய இடங்களில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.