வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அரசம்பட்டு பகுதியில் சங்கராபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையின் போது இரண்டு பெண்கள் சாராயம் விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அதே ஊரில் வசித்து வரும் சின்னப்பிள்ளை மற்றும் வள்ளி ஆகிய இரண்டு பெண்களையும் வீட்டின் பின்னால் சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.