கோயில்களில் இறைவனை பெண்கள் எவ்வாறு வணங்க வேண்டும் என்பது பற்றிய தொகுப்பு
கோவிலில் பெண்கள் இறைவனை வணங்கும் போது அவர்களின் தலைமுடி தரையில் படக்கூடாது. அவ்வாறு பட்டால் பெரியவர்களின் ஆசியும் தெய்வத்தின் அருளும் கிடைக்காதபடி தேவதைகள் தடுத்து விடுவார்கள் என்று கூறப்படும்.
பூமித்தாயை பெண்கள் விழுந்து வணங்கும்போது தலை முடியை கொண்டை போட்டுக் கொண்டு வணங்க வேண்டும். இது வெகு நாட்கள் ஆரோக்கியமான வாழ்க்கையைக் கொடுக்கும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது.
பெண்கள் தலை, முழங்கால் இரண்டு, கை இரண்டு என்று ஐந்தும் நிலத்தில் படும்படி பஞ்சாங்க நமஸ்காரம் ஒற்றைப் படையில் செய்வது நன்மைகளை கொடுப்பதோடு உடற்பயிற்சி போன்றும் அமைகின்றது.