மாதவிடாய் பிரச்சினைக்கு கற்றாழை எப்படி பயன்படுத்தலாம் என்று இங்கே பார்க்கலாம்.
இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு முக்க்கிய பிரச்சினையாக இருப்பது மாதவிடாய் பிரச்சனை. இதனால் பெண்கள் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். ஒழுங்கற்ற மாதவிடாயினால் பெண்களுக்கு பல்வேறு கருப்பை சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக கற்றாழையை பயன்படுத்துவது எப்படி என்று இங்கே காணலாம். கற்றாழையில் பல மருத்துவக் குணங்கள் உள்ளது அனைவரும் அறிந்த ஒன்று.
சோற்றுக் கற்றாலையை தோல் நீக்கி நன்றாக கழுவிய பிறகு அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சினைகள் நீங்கும்.
இதனால் நீர்கடுப்பு, நீர் எரிச்சல், அரிப்பு போன்றவை நீங்க கற்றாழை தீர்வாக அமையும்.