Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பெண்களே.. நீண்ட, அடர்த்தியான கூந்தல் வேண்டுமா…? வீட்டிலேயே இயற்கை தைலம்…. எப்படி செய்வது…?

எல்லோருக்குமே மிக நீண்ட கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தற்போதைய உள்ள நிலையில் முடி யாருக்குமே நீண்டு வளர்வதில்லை.

ஏனெனில் தண்ணீர், ஷாம்பு, எண்ணெய்  உண்ணும் உணவு என்று அனைத்துமே ரசாயனக் கலப்பு இருப்பதால் முடி வளர்வது இல்லை. அதற்கு பதிலாக முடி உதிர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உங்கள் வீட்டு பெண்களுக்கு முடி நீண்டு வளர வேண்டுமென்றால் இந்த இயற்கை தைலத்தை வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்துங்கள்.

தேவையான பொருள்:

▪️நெல்லிக்காய் பொடி – 10 கிராம்
▪️தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்
▪️தான்றிக்காய் பொடி – 10 கிராம்
▪️வேப்பிலை பொடி – 10 கிராம்
▪️செம்பருத்தி பூ பொடி – 10 கிராம்
▪️சந்தனப்பொடி – 10 கிராம்
▪️கருவேப்பிலை பொடி – 10 கிராம்
▪️கரிசலாங்கன்னி பொடி – 10 கிராம்
▪️வெட்டிவேர் – 10 கிராம்
▪️ரோஜா இதழ் – 10 கிராம்
▪️மருதாணி பொடி – 10 கிராம்

செய்முறை :

எல்லா பொடிகளையும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து நன்றாக காய்ச்சிக் கொள்ளவும். நன்கு காய்ந்ததும் அதை அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும். இதை நல்ல சூரிய ஒளியில் ஒரு வாரத்திற்கு வைக்கவும். அதன் பின்பு எண்ணையை வடிகட்டி பயன்படுத்தவும். இந்த எண்ணெயை தினமும் பயன்படுத்துவதால், முடி உதிர்வது முதலில் குறையும். உடல் சூடு தணியும். இளநரை குறையும். கூந்தல் நீண்டு அடர்த்தியாக வளரும்.

Categories

Tech |