லேடி சூப்பர் ஸ்டார் தனது காதலருடன் தனி விமானத்தில் வெளியில் சென்ற புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் விக்னேஷ் சிவனும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த சில மாதங்களாக இருவரும் தங்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தனர். தற்போது அவர்கள் இருவரும் ஓணம் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து கேரளாவிற்கு தனி விமானம் மூலம் சென்றுள்ளனர்.
சமூக வலைதளங்களில் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இவர்கள் இருவரும் ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு அடுத்த வாரம் சென்னை திரும்புவார்கள் என்றும் அதன் பிறகு நயன்தாராவை வைத்து “காத்துவாக்குல ரெண்டு காதல்” என்ற படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.