சாராயம் காய்ச்சிய 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுகின்றதா என்பதை கண்காணிப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ராம்ஜி நகர் பகுதியில் திருச்சி மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஜீவிதா மற்றும் விமலாதேவி என்ற இரண்டு பெண்கள் வீட்டிலேயே சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து அந்த இரண்டு பெண்களையும் மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 165 லிட்டர் சாராய ஊறல், 3 லிட்டர் சாராயம் மற்றும் அடுப்புகள் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.