சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஜெயா என்பதும், சட்டவிரோதமாக அங்கு கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக ஜெயாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 10 கிலோ கஞ்சா மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.