வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முத்துலட்சுமி என்ற பெண் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது உறுதியானது.
இதனையடுத்து காவல்துறையினர் முத்துலட்சுமியின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். அதன் பின் முத்து லட்சுமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.