Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அவள் திருந்தவே இல்ல… இப்படி பண்ணுனா தான் சரிவரும்… மாவட்ட கலெக்டரின் உத்தரவு…!!

தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த பெண்ணை காவல்துறையினர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில் பூங்கொடி என்ற பெண் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் நகர காவல் துறையினர் பூங்கொடியை சாராய வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். மேலும் இவர் மீது சாராயம் கடத்தல், விற்பனை செய்தல் போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது.

இந்நிலையில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் பூங்கொடியை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன்படி மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை பூங்கொடியை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பூங்கொடி கைது செய்யப்பட்டதன் நகலை சிறையில் இருக்கும் அவருக்கு அலுவலர்கள் வழங்கியுள்ளனர்.

Categories

Tech |