Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

காலம் மாறி போச்சு… பெண்களே இப்படி செய்யலாமா…? கைது செய்த காவல்துறை…!!

சாராயம் விற்ற இரண்டு பெண்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த 209 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள வெட்டுவானம் பகுதியில் சாராய விற்பனையை தடுக்க மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெட்டுவானம் பகுதியில் உள்ள கோவிலின் பின்புறம் சாராயம் விற்ற காரணத்திற்காக அதே பகுதியில் வசித்து வரும் சௌந்தர்ராஜனின் மனைவி கிருஷ்ணவேணி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து மேல் பள்ளிப்பட்டு கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்து சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக ஆறுமுகம் என்பவரது மனைவி பவானியையும் போலீசார் கைது செய்தனர். அதோடு அந்த இரு பெண்களிடமிருந்த 2௦9 லிட்டர் சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Categories

Tech |