பாலத்திற்கு அடியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அக்ரஹாரசாமகுளம் ஊராட்சியில் 160 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் அமைந்துள்ளது. இந்நிலையில் கோவில்பாளையம் போலீசாருக்கு இந்த குளத்திற்கு சொல்லக்கூடிய பாலத்தின் அடியில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டனர்.
இதனை தொடர்ந்து தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்ததில் அவரிடம் செல்போன் இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் பின் அந்த செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை செய்தபோது, அந்த பெண் மசகவுண்டன் தோட்டத்தில் வசித்து வரும் பண்ணாரி என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பெண் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்றும், அந்த பெண்ணை கொலை செய்த மர்ம நபர்கள் விவரம் குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.