Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என் கணவனை மீட்டு கொடுங்க ஐயா…! கலெக்டர் அலுவலகத்தில் மனைவி கண்ணீர்… விருதுநகரை உலுக்கிய சோகம் …!!

மலேசியாவில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து வரும்படி அவரது மனைவி தனது இரு குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரை குளத்தில் கருப்பசாமி என்பவர் வசித்துவருகிறார். இவர் மேலூரை சேர்ந்த ஒரு தரகர் மூலம் மலேசியாவில் உள்ள ஒரு உணவகத்திற்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றிருந்தார். அதன்பின் கடந்த 10 மாதங்களாக வேலை இல்லாத சமயத்தில் தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கருப்பசாமி அவரது மனைவி கோகிலா விற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனது கணவரை அவர் வேலை செய்யும் இடத்திலிருந்து மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த அக்டோபர் மாதம் கோகிலா மனு அளித்தார். ஆனால் நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் உரிய மருத்துவ வசதி இல்லாமல் கருப்பசாமி உடல்நலபாதிப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து கருப்பசாமியுடன் வேலை செய்பவர்கள் அவரது மனைவிக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்  தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் தனது கணவர் கருப்பசாமியின் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர உதவி செய்யும்படி கோகிலா தனது 2 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கதறி அழுதபடி கலெக்டரிடம் மனு கொடுத்தார். மேலும் தனது கணவரின் உடல்நிலை பாதிக்கப்பட்ட உடனே தரகரை தொடர்பு கொண்டு அவரை மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்து வரும்படி கோகிலா கூறியதற்கு அவர் கோகிலாவை தகாத வார்த்தைகளால் திட்டி உதவி செய்ய மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு தனது இரு குழந்தைகளுடன் கோகிலா எந்தவித வாழ்வாதாரமும் இன்றி தவிக்கும் நிலையில் உள்ளதாக கலெக்டரிடம் கூறியுள்ளார்.

Categories

Tech |