Categories
உலக செய்திகள்

ஒரே சமயத்தில் இரண்டு பேருடன் வாழ்ந்த பெண்.. கர்பமடைந்ததால் ஏற்பட்ட பிரச்சனை..!!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் திருமணமான பெண் இணையத்தளத்தில் மற்றொரு நபருடன் நெருங்கி பழகியதால் பல பிரச்சனைகள் நேர்ந்துள்ளது. 

பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெண் ஒருவர் திருமணம் ஆன பிறகும் இணையத்தில் ஒரு நபருடன் பழகி வந்துள்ளார். இருவரும் நெருக்கமாக பழகியதில் அந்த பெண் கர்ப்பமடைந்துள்ளார். அதே சமயத்தில் தன் கணவருடனும் அந்த பெண் நெருக்கமாக இருந்திருக்கிறார். கர்ப்பமடைந்தவுடன் அந்தப் பெண் இணையத்தில் சந்தித்த தன் காதலனிடம் கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது என்று பொய் கூறி அவருடனான உறவை முடித்துள்ளார்.

அதன்பிறகு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ஓராண்டிற்கு பிறகு, தேவையில்லாமல் அந்த பெண் குழந்தையின் புகைப்படங்களை முகநூலில் வெளியிட்டதோடு  மீண்டும் தன் இணைய காதலனிடம், நமக்கு பிறந்த அழகான குழந்தை இது, நீங்கள் கொடுத்த பரிசுகளில் இது சிறந்தது என்று குறுஞ்செய்திகள் அனுப்பியிருக்கிறார்.

இதனால் அந்த நபரும், குழந்தையையும் அந்த பெண்ணையும் பல தடவை சந்தித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இந்த பெண் மீண்டும் அவரை பிரிந்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த நபர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். அதன் பின்புதான் இந்தப் பெண் இவ்வாறு ஒரு பிரச்சனை இருப்பதாக கணவரிடம் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தில், இணையத்தில் சந்தித்த நபர், குழந்தைக்கு மரபணு பரிசோதனை செய்து தன்னுடையதா? என்று நிரூபிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் இந்த பெண்ணிற்கு சாதகமாக வாதாடிய வழக்கறிஞர், அவர்களுடனான உறவு தற்செயலாக நிகழ்ந்தது. எனவே  குழந்தைக்கு மரபணு பரிசோதனை செய்யக் கூடாது என்று வாதிட்டுள்ளார்.

ஆனால் நீதிபதி Justine Saunders, குழந்தையின் புகைப்படங்களை முகநூல் தளத்தில் வெளியிட்டு, நமக்கு பிறந்த அழகான குழந்தை இது என்றும் நீ எனக்கு கொடுத்த சிறந்த பரிசு என்றும் இந்த பெண் குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளார். எனவே இது தற்செயலாக நிகழ்ந்தது இல்லை என்று கூறிவிட்டார். மேலும் மரபணு பரிசோதனைக்காக உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி.

Categories

Tech |