குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழ ஈரால் நடுத்தெருவில் கணேசமூர்த்தி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கனக துர்காதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலில் இருந்த துர்கா தேவி திடீரென தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செயத போலீசார் தவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.