உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் என்ற பகுதியில் அழகிரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலம் என்ற மனைவியும், 4 மகள்களும், 1 மகனும் உள்ளனர். அழகிரியின் 4 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அழகிரி இறந்துவிட்டதால் கமலம் தன்னுடைய மகனுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக கமலத்திற்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது.
இதனால் மிகவும் விரக்தியடைந்த கமலம் அவரது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகிய நிலையில் கமலம் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வீரவநல்லூர் போலீசார் விரைந்து வந்து அவரின் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.