தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் மாரியப்பன் என்ற எலக்ட்ரிஷியன் வசித்து வருகிறார். இவருக்கு சென்னம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சென்னம்மாள் தனது கணவரிடம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் மாரியப்பன் தனக்கு அதிக வேலை இருப்பதாக கூறி விட்டு சென்று விட்டார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த சென்னம்மாள் அவரது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து மயங்கி கிடந்த அவரை, அவரது அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் சென்னம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் தனது தங்கையின் சாவில் சந்தேகம் இருப்பதாக சென்னம்மாளின் அண்ணன் பெரியண்ணன் மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் போலீசார் வழக்கு பதிந்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.