Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொடரும் கொடுமை…. பெண்ணிற்கு நேர்ந்த சோகம்… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தர்மத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மகள் உள்ளார். இவருக்கு புதுப்பட்டியில் வசித்து வரும் ராஜ்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்தின் போது வரதட்சணையாக 15 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் கொடுத்து உள்ளனர்.

இந்நிலையில் திவ்யாவின் கணவர் ராஜ்குமார், மைத்துனர் ராஜசேகர், மாமனார் சண்முகம் மற்றும் மாமியார் மாரியம்மாள் இணைந்து மேலும் வரதட்சணை கேட்டு திவ்யாவை துன்புறுத்தியுள்ளனர், இவர்களால் மனமுடைந்த திவ்யா திடீரென அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார், மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கன்னிவாடி போலீசார் மற்றும் திண்டுக்கல் ஆர்டிஓ வரதட்சணை காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |