வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நேதாஜி சாலை பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சசிகலா தனது குடும்ப தேவைக்காக அப்பகுதியில் வசிக்கும் சிலரிடம் கடன் பெற்றுள்ளார். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் வாங்கிய கடனை சசிகலாவால் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சசிகலா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் டவுன் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.