கலிபோர்னியாவில் பச்சிளம் குழந்தையின் முகத்தின் அருகே சென்று வேண்டுமென்றே ஒரு பெண் இருமும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
கலிபோர்னியாவில் இருக்கும் சான் ஜோஸ் பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றுக்கு வந்தவர்கள் வாசலில் வரிசையாக நின்று உள்ளனர். அப்போது தள்ளுவண்டியில் குழந்தையுடன் நின்ற பெண் ஒருவர் சமூக இடைவெளியை சரியாகப் பின்பற்றவில்லை என கூறி அவருக்கு முன்னாள் நின்ற பெண் சண்டையிட்டுள்ளனர். இவர்கள் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த பெண் தான் அணிந்திருந்த மாஸ்க்கை கழற்றி தள்ளுவண்டியில் இருந்த குழந்தையின் முகத்தின் அருகே சென்று மூன்று முறை இருமியுள்ளார்.
அமெரிக்காவில் ஏற்கனவே தொற்று அதிக அளவில் பரவி வரும் நிலையில் அந்த பெண்ணின் செயலைப் பார்த்து பதறிப்போன தாய் குழந்தை இருந்த வண்டியின் மூடியை மூடி குழந்தையை பாதுகாப்பதற்கு முயற்சி செய்துள்ளார். அதன் பிறகு குழந்தையின் முகத்தில் இருமிய பெண் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனைத்தொடர்ந்து குழந்தையின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் காவல்துறையினர் அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.