Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கூட்டம் நிறைந்த மருத்துவமனையில்…. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்… சென்னையில் பரபரப்பு…!!

அரசு மருத்துவமனையில் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த மருத்துவமனையில் இருக்கும் 8-வது தளத்தில் அழுகிய நிலையில் கிடந்த பெண் ஒருவரின் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருக்கும் 3-ஆவது தளத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அந்த பெண் குரோம்பேட்டை பகுதியில் வசிக்கும் சுனிதா என்பதும், கடந்த மாதம் 22ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. ஆனால் அனுமதிக்கப்பட்ட மறுநாளே சுனிதா காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர்  காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். எனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சுனிதா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரை மர்ம நபர்கள் கொலை செய்தனரா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |