Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஹீட்டர் இணைப்பை துண்டித்த இளம் பெண்” திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கள்ளிப்பட்டி பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 108 ஆம்புலன்சில் தொழில்நுட்ப உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பாண்டியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பாண்டியம்மாள் தனது இரண்டாவது மகன் குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டர் மூலம் வெந்நீர் வைத்துள்ளார். இதனை அடுத்து வாட்டர் ஹீட்டரின் இணைப்பை துண்டிப்பதற்காக பாண்டியம்மாள் ஸ்விட்ச் பாக்ஸை தொட்டுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியம்மாளின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |