வீடு இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள வெங்கடாசலபுரம் பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜாமணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ராஜாமணி சமையல் வேலை செய்து கொண்டிருந்த போது கருப்பையா வீட்டு திண்ணையில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வீடு இடிந்து விழுந்துவிட்டது. இதனால் சமையல் செய்து கொண்டிருந்த ராஜாமணி கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிவிட்டார்.
இதனையடுத்து படுகாயமடைந்த ராஜாமணியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜாமணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.