ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள சண்முகம்நகரில் வெல்டிங் தொழிலாளியான ராஜேஷ் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்தப் பகுதிக்கு அருகில் இருக்கும் நொய்யல் ஆற்றில் அதிகமாக தண்ணீர் வருவதால் ராஜேஷ் தனது மனைவி மற்றும் நண்பர்களை அழைத்துக்கொண்டு சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போது சரஸ்வதி ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. எனவே அங்கிருந்தவர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் கடுமையான போராட்டத்திற்குப் பின் சரஸ்வதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.