Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்…. போலீஸ் விசாரணை…!!

பூட்டிய வீட்டுக்குள் பெண் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள காட்டுப்பாக்கம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் அமீனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் ஆந்திராவில் பணிபுரிந்து வருவதால் 10 நாட்களுக்கு ஒரு முறை அமீனா தனது கணவரை பார்ப்பதற்காக ஆந்திராவிற்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் அமீனாவின் வீட்டு கதவு பூட்டி இருந்ததால் அக்கம் பக்கத்தினர் அவர் ஆந்திரா சென்றிருக்கலாம் என நினைத்துள்ளனர். ஆனால் அவரது வீட்டில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அமீனா அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை அடுத்து அமீனாவின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அமீனா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது உடல் நலக்குறைவினால் இறந்தாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |