மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் பண்ணாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாபா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென நிலைதடுமாறி பாபா மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.