பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அயன் கொல்லங்கொண்டான் பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கூடங்குளம் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் தனலட்சுமி ஏறியுள்ளார். இதனையடுத்து அயன் கொல்லங்கொண்டான் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய தனலட்சுமி திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார்.
அப்போது பேருந்தின் பின்பக்க டயர் தனலட்சுமியின் மீது ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தனலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.