மர்ம நபர் பெண்ணை கத்தியால் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துரைச்சாமிபுரம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அதே பகுதியில் கணேசன் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகின்றார். கடந்த நவம்பர் 7 – ஆம் தேதியன்று சந்தையில் காய்கறி வாங்குவதற்காக கணேசன் சென்றிருந்தார். அதன்பிறகு இந்திராணி பெட்டி கடையை கவனித்துக்கொண்டிருந்தார்.
இதனை அடுத்து பகலில் 11 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் பெட்டிக்கடைக்கு வந்துள்ளார். அதன் பின்னர் தீடீரென மர்ம நபர் பெட்டி கடைக்குள் புகுந்து இந்திராணியை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன் பிறகு இந்திராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இந்திராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபரான பரமசிவம் மற்றும் அழகுராஜா ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.