Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அளவில்லாத பாசம்… தாங்க முடியாத இழப்பு… தம்பி இறந்த துக்கத்தில் அக்காவும் இறப்பு…!!

தம்பி இறந்த துக்கம் தாங்காமல் அக்காவும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனுக்கூரை என்ற பகுதியில் பெரியசாமி-பெரியம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர். பெரியம்மாளுக்கு செல்லமுத்து என்ற தம்பி உள்ளார். இவரது தம்பி கடந்த 3 மாதத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் திருவாலந்துறையில் உயிரிழந்தார். இவருக்கு திருவாலந்துறையில் கடந்த 9ஆம் தேதி 90வது நாள் துவக்க நிகழ்ச்சி நடந்துள்ளது. அங்கு பெரியம்மாள் தனது தம்பி இறந்த துக்கத்தில் அவரின் புகைப்படத்தை பார்த்து அழுதுள்ளார்.

அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை அங்கு உள்ளவர்கள் உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன்பின் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனில்லாமல் பெரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |