பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள மாவடி பாளையம் பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்பனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும், ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென கல்பனா விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த கல்பனாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கல்பனா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கல்பனா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.