Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாடிக்கு சென்ற பெண்… சட்டென நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

துணி காயப்போடும் போது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி வேதாம்பாள் நகரில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணன் இறந்து விட்டதால் விஜயலட்சுமி தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயலட்சுமி துணிகளை காயப் போடுவதற்காக மாடிக்கு சென்றுள்ளார். அதன் பின் துணியை காய போட்டு கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விஜயலட்சுமியின் கை மின்சார கம்பியில் பட்டது.

அதிலிருந்து மின்சாரம் பயந்ததால் தூக்கி வீசப்பட்ட விஜயலட்சுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விஜயலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |