Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? மது குடித்த பெண்ணிற்கு நடந்த விபரீதம்… தனியாக தவிக்கும் மகன்கள்…!!

கணவரை விட்டு பிரிந்ததால் அளவுக்கு அதிகமாக மது குடித்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணேசபுரம் பகுதியில் சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரீனா இமாகுலேட் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக சார்லஸ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து வெளிநாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன் தன்னை விட்டுப் பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்த இமாகுலேட் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்.

இதனையடுத்து அவருடைய மகன்கள் மது குடிப்பதை நிறுத்துமாறு ரீனாவிடம் கூறிய போதும் அவர் அதனை கேட்கவில்லை. இந்நிலையில் ஒரு கட்டத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்த ரீனா மயங்கி விழுந்து விட்டார். அதன் பின் அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |