கணவரின் கள்ள காதலால் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஆலப்பட்டி பகுதியில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் வேறு ஒரு பெண்ணுடன் முத்துராஜ் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி விட்டது. இது குறித்து அறிந்த ஆனந்தி தனது கணவரிடம் விசாரித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலில் இருந்த ஆனந்தி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஆனந்தி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.