பெண் சாலையை கடக்க முயன்ற போது அவரின் மீது வேன் மோதியதில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள கந்தனேரி பகுதியில் சிவாஜி என்ற கூலித் தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் மேய்ச்சலுக்காக பசு மாட்டை கட்டி விட்டு பின் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது மகேஸ்வரி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது அந்த வழியாக சென்னையிலிருந்து சேலம் மாவட்டத்திற்கு வேகமாக சென்று கொண்டிருந்த வேன் ஒன்று அவரின் மீது மோதியது.
இதனால் மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.