Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற குடும்பத்தினர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அரியலூரில் சோகம்…!!

நடந்து சென்று கொண்டிருந்தபோது வாகனம் மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள மெய்க்காவல்புத்தூர் பகுதியில் அண்ணா துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு அருண் குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அண்ணாதுரை தனது மனைவி மற்றும் மகனுடன் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். இதனையடுத்து அவ்வழியாக வேகமாக சென்ற வாகனம் இவர்கள் மீது பலமாக மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

இதனை அடுத்து படுகாயமடைந்த அருண் குமார் மற்றும் அண்ணாதுரையை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமியின்  சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |