Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அழைப்பிதழ் கொடுக்க சென்ற தம்பதிகள்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. மதுரையில் கோர விபத்து…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள பெருமாள்பட்டி பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளின் மகனுக்கு தற்போது திருமணம் நடக்க உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதனை அடுத்து பேரையூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே அழகர்சாமி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சுந்தரத்தின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த தம்பதிகளை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுப்புலட்சுமி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |