ஸ்கூட்டர் மீது டிராக்டர் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள இ.பி நகரில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஜவுளி கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு தனது ஸ்கூட்டரில் காயத்ரி மலையம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் கரும்பு பாரம் ஏற்றி சென்ற இரட்டை டிப்பர் உடன் கூடிய ட்ராக்டர் திடீரென இடது புறமாக திரும்பி உள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் ஸ்கூட்டரின் மீது மோதியதால் தூக்கி வீசப்பட்டார் காயத்ரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனை பார்த்ததும் அச்சத்தில் டிராக்டரை ஓட்டிவந்த ஓட்டுனர் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் தப்பியோடிய டிராக்டர் ஓட்டுநரான மணிவேல் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.