Categories
மதுரை மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள அருள்தாஸ்புரம் பகுதியில் முத்து பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் ஆதிலட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த ஆதிலட்சுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆதிலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |