தாய் தனது இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நித்தியா என்ற மனைவியும், விஜய் தண்டபாணி என்ற மகனும், பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையும் உள்ளது. நித்யா தனது பிரசவத்திற்கு வந்ததிலிருந்தே எஸ்.என். சாவடியில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில் தங்கியிருக்கிறார். இந்நிலையில் திடீரென நித்தியா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதோடு அவரது இரு குழந்தைகளும் தரையில் உயிரற்ற நிலையில் கிடந்தன. இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் நித்யா தனது இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு அதன் பின்னே தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் வெளிவந்ததுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நித்யா எதற்காக தனது இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.