கடலூர் நோக்கி நேற்று தனியார் பேருந்து பண்ருட்டியில் இருந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்து கீழ்பட்டாம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே லாரி வந்தது. இதனால் பேருந்து ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்ததால் பேருந்தில் பயணம் செய்த ஒரு இளம்பெண் தனது கைக்குழந்தையுடன் பின் பக்க படிக்கட்டு வழியாக சாலையில் விழுந்தார். இதனை கவனிக்காமல் ஓட்டுநர் பேருந்த இயக்கியதால் பொதுமக்கள் சத்தம் போட்டனர்.
இதனால் ஓட்டுனர் பேருந்து நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக தாயும் குழந்தையும் உயிர்த்தப்பினர். இதனை அடுத்து பொதுமக்கள் அந்த பெண்ணின் கணவரை வரவழைத்து அவருடன் தாய் மற்றும் குழந்தையை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.