Categories
தேசிய செய்திகள்

கடவுள் பலிகொடுக்க கட்டளையிட்டான்… பெற்ற மகனை கழுத்தறுத்துக் கொன்ற தாய்… கேரளாவில் நடந்த கொடூர சம்பவம்…!!

கடவுள் தனது மகனை பலிகொடுக்குமாறு கட்டளையிட்டார் என கூறி பெற்ற மகனை தாய் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்திலுள்ள பூலக்காடு பகுதியில் டாக்ஸி டிரைவரான சுலைமான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாகிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன. இதில் ஷாகிதா தற்போது கர்ப்பமாக இருக்கின்றார். இந்நிலையில் வீட்டில் சுலைமான் அவரது குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது அதிகாலை 4 மணி அளவில் தனது இளைய மகனான ஆமிலை ஷாகிதா குளியல் அறைக்கு தூக்கி சென்று, தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுவனை பெற்ற மகன் என்று கூட நினைக்காமல் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்து விட்டார்.இதனை அடுத்து பாலக்காடு காவல் நிலையத்திற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஷாகிதா தனது மகனை கொன்ற தகவலை அவர்களிடம் கூறியுள்ளார்.

அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரது வீட்டின் குளியலறையில் பிணமாக கிடந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து ஷாகிதாவிடம் போலீசார் அவரது மகனை கொன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது ஷாகிதா கடவுள் தன்னுடைய மகனை பலியிடுமாறு கட்டளையிட்டான் எனவும், அதன் காரணத்தினாலேயே மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டதாக போலீசாரிடம் ஷாகிதா கூறியுள்ளார்.

அதோடு  போலீசார் வந்து கதவை தட்டிய பிறகே தனது மகனை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் சுலைமானுக்கு தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனை கழுத்தை அறுத்து கொலை செய்த குற்றத்திற்காக ஷாகிதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |