Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குழந்தைகளை கொன்ற நேபாள பெண்…. அதிர்ச்சியடைந்த கணவர்…. கோவையில் பரபரப்பு…!!

நேபாளத்தை சேர்ந்த பெண் தனது 2 குழந்தைகளை கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குப்பனூர் பகுதியில் இருக்கும் தோட்டத்து வீட்டில் நேபாள நாட்டை சேர்ந்த ஆதித்ய பண்டாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தன்கலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ருத்ரா, அலிஷா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தோட்டத்து வேலையை முடித்து விட்டு மதிய நேரம் வீட்டிற்கு சென்ற ஆதித்ய பண்டாரி கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போட்டிருந்ததை பார்த்துள்ளார்.

இதனையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தன்கலா, ருத்ரா, அலிஷா போன்றோர் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு ஆதித்ய பண்டாரி அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் அரிவாளால் துப்பட்டாவை அறுத்து தனது மனைவி மற்றும் குழந்தைகளை தூக்கில் இருந்து இறக்கி ஆதித்ய பண்டாரி அலறி சத்தம் போட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தீராத தலைவலி மற்றும் உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த தன்கலாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. எனவே தனது இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டு தன்கலா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

Categories

Tech |