80 பவுன் தங்க நகை 40 லட்சம் ரூபாய் பணத்துடன் காணாமல் போன தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளை கண்டுபிடித்து தருமாறு தாயார் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னதிருப்பதி பகுதியில் சீதாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சீதாலட்சுமி தனது மகள் மற்றும் பேரக் குழந்தைகளை கண்டுபிடித்து தருமாறு அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் சீதாலட்சுமி எனக்கு ருக்குமணி பிரியா என்ற மகள் இருக்கின்றார். ருக்மணியின் கணவர் கிருஷ்ணகுமார் ஆவார். இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு பிரீத்திலட்சுமி, முகுந்ததாஸ் என இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் எனது மகள் மற்றும் பேரக் குழந்தைகள் என்னுடன் வீட்டில் வசித்து வந்தனர்.
இதனையடுத்து திடீரென எனது மகள், பேரக்குழந்தைகளுடன் காணாமல் போய்விட்டார். மேலும் அவர் எனது வீட்டில் இருந்த 80 பவுன் தங்க நகை மற்றும் 40 லட்சம் ரூபாய் பணம் போன்றவற்றையும் எடுத்து சென்றுள்ளார். இதனையடுத்து நான் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை. எனவே திடீரென மாயமான எனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சீதாலட்சுமி அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அஸ்தம்பட்டி காவல் துறையினர் மாயமான ருக்மணி பிரியா மற்றும் குழந்தைகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.