குடும்ப தகராறில் கணவன் மனைவியை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கண்ணகி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த செல்வராஜ் கண்ணகியின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார்.
இதனால் காயமடைந்த கண்ணகியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன் பிறகு காயத்துக்கு தையல் போட்டு வீட்டிற்கு வந்த கண்ணகி திடீரென உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.