ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.
தியாகத் தலைவி சின்னம்மா, தியாகத்தலைவி சின்னமா… தென்னகத்தின் ஜான்சி ராணி சின்னம்மா…. வீரமங்கை வேலு நாச்சியார் சின்னம்மா…. தமிழகத்தின் வருங்கால முதல்வர் சின்னம்மா… என்ற கோஷங்களுக்கு நடுவே செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, இந்த இல்லத்திற்கு வந்து யாரும் அனாதைகள் இல்லை என்பதை உணர்த்துவதற்கு. நான் போன வருடமும் இங்கு வந்து, அவர்களோடு சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டு, கிறிஸ்மஸ் விழாவை கொண்டாடினேன். அதேபோல் இன்றும் அவர்களுடன் இணைந்து நானும், சேர்ந்து, மகிழ்ந்து இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன் என்று தெரிவித்தார்
நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு முன்பாக அதிமுகவை ஒன்றிணைப்பேன் என சொன்னீங்க? ஓ.பன்னீர்செல்வம் தனியாக நிர்வாகிகள் சந்திப்பு, ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளார். நாளுக்கு நாள் விரிசல் அதிகமாக இருக்கின்றது. நீங்க நினைச்சது நடக்கும்னு நினைக்கிறீங்களா ? என்ற கேள்விக்கு சசிகலா ,இப்பவும் அது தான் சொல்கின்றேன். நிச்சயமாக நடக்கும்.
நாங்கள் ஒன்றாக நிற்க முடியும். காரணம் அவங்க வந்து தனித்தனியாக செயல்படுகிறார்கள் ? என்னைப் பொருத்தவரைக்கும், அப்படி இல்லை. நான் எப்ப பெங்களூரில் இருந்து வெளியே வந்தனோ.. அன்னைக்கு என்ன சொன்னேனே ? அதேதான் இப்பயும் சொல்றேன். எல்லோரும் ஒன்றிணைந்து, நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி அடைவோம் என தெரிவித்தார்.