Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“காதல் தோல்வியினால் இப்படி செய்தேன்” எலி பேஸ்ட்டை தின்று தற்கொலை… பெண் போலீசின் பரபரப்பு வாக்குமூலம்…!!

காதல் தோல்வியினால் எலி பேஸ்ட்டை தின்று பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள குறிச்சி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுசல்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர் பணியில் சேர்ந்து திருச்சி ஆயுதப்படை பிரிவில் தற்போது வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கௌசல்யா தன்னுடன் வேலை பார்க்கும் போலீஸ்காரரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இதனால் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்த பின்னர் போலீஸ்காரர் கௌசல்யாவின் வீட்டிற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்று பெண் கேட்ட போது, ஜாதியை காரணம் காட்டி கவுசல்யாவின் பெற்றோர் திருமணம் செய்து கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் அந்த போலீஸ்காரருக்கு கடந்த மாதம் அவருடைய தாய் மாமன் மகளை அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த கவுசல்யா திடீரென வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை தின்று தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பின் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கௌசல்யா பெற்றோரோ, காதலனோ யாரும் தனது சாவுக்கு காரணம் இல்லை எனவும், காதல் தோல்வியினால் தான் இவ்வாறு எலி பேஸ்ட்டை தின்று தற்கொலை செய்து கொண்டேன் எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவர்கள் கௌசல்யாவுக்கு அளித்த சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் கௌசல்யாவின் உடலை கே.கே நகர் காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |