காவல்துறை தலைமை அலுவலகம் அருகிலேயே ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் நீலம் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அந்த பூங்காவில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். அந்தப் பெண் தினக்கூலி வேலை பார்த்துவிட்டு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரால் நடக்க முடியாத காரணத்தால் நீலம் பூங்காவில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என எண்ணி அமர்ந்துவிட்டார். அந்தசமயம் அங்கு வந்த ஒரு மர்ம நபர் அந்த பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் இந்த சம்பவமானது காவல்துறை தலைமை அலுவலகத்தின் மிக அருகாமையில் நடந்துள்ளது. இதையடுத்து போலீசார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அந்த வாலிபர் நீலம் பூங்காவின் அருகில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர். காவல்துறை தலைமை அலுவலகம் அருகிலேயே இவ்வாறு ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியது பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.