Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காலம் மாறி போச்சு…. பெண்களே இப்படி செய்யலாமா…. கைது செய்த காவல்துறையினர்….!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே பீடர் சாலையில் சாத்தூர் டவுன் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் பெட்டி கடை முன்பு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில் அவர் அப்பகுதியில் வசிக்கும் ஆரோக்கிய மேரி என்பதும், சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.இதனையடுத்து அந்த பெண்ணை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 10 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |