Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேலைக்கு ஏன் போகல….? கணவனை கண்டித்த மனைவி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் எலக்ட்ரீசியனான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரவி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரவி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |