முன்விரோதம் காரணமாக ஒருவர் அண்ணனின் மனைவியை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசநத்தம் பகுதியில் வடிவேலு என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் வடிவேலுக்கும், அவரது அண்ணன் மனைவியான சரோஜா என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. மேலும் இவர்கள் இருவருக்கும் பொதுவான விவசாய கிணறு இருக்கின்றது. இந்நிலையில் அந்த விவசாய கிணற்றில் இருந்து டீசல் என்ஜின் மூலம் சரோஜா தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி உள்ளார்.
இதனால் கோபமடைந்த வடிவேலு தனது நிலத்தில் தான் முதலில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்று கூறி சரோஜாவை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு விட்டார். இதனையடுத்து அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று சரோஜாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நாட்டுத் துப்பாக்கியால் அண்ணன் மனைவியை சுட்ட வடிவேலுவை வலைவீசி தேடி வருகின்றனர்.